காராஷ்டிர மாநிலம் புனேவில் நதிக்கரையில் நிலங்களை ஆக்கிரமிப்பதைக் குறித்து செய்தி சேகரிக்கை யில், அந்த ஆக்கிரமிப்புக்குக் காரணமான பாண்டுரங்கன் என்பவர் செய்தியாளரை பட்டப்பகலில் பல பேர் முன்னிலையில் தடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் மஞ்சார் நகரமருகேயுள்ள நதிப்படுகை யொன்றில் நிலத்தை ஆக்கிரமித்து நடந்துவரும் கட்டட வேலைகள் குறித்து சம்ரத் பாரத் நாளிதழின் யூ டியூப் பகுதிக்காகச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார் ஸ்நேகா பர்வே. 

அப்போது அந்த நிலத்தை ஆக்கிரமித் திருந்த பாண்டுரங்கன் நீளமான மரக்கட்டை யை எடுத்து, ஸ்நேகா அலற, அலற கட்டை யால் அவரைத் தாக்க ஆரம்பித்தார். இதில் அதிர்ச்சியடைந்த ஸ்நேகா மயக்கமடைந்த நிலையில், அவருடன் வீடியோ பதிவுக்காக வந்த அஜாஜ் ஷேக் இந்தத் தாக்குதலைப் படம்பிடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு பாண்டுரங்கனின் ஆட்கள் ஷேக்கையும் தாக்க ஆரம்பித்தனர்.

Advertisment

ஸ்நேகா, ஷேக் இருவரையும் தாக்கு தலிலிருந்து காப்பாற்ற முயன்றவர்களுக்கும் பாண்டுரங்கனின் அடி விழுந்தது. இதில் ஒருவருக்கு கை உடைந்துபோனதுடன் மற்றொருவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் ஸ்நேகாவை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

மன்சார் காவல் நிலையத் தின் மூத்த காவல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த், "சம்பவம் நடந்த அன்றிரவு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

முக்கிய குற்றவாளி (பாண்டுரங் மோர்டே) காலில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் கைது செய்யப்படவில்லை'' என்கிறார். மாறாக, அவர் பா.ஜ.க. என்பதால் அவரைத் தப்பிக்க வைப்பதற்கான வேலைகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Advertisment

பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 118(2), 115(2), 189(2), 191(2), 190 மற்றும் 351(2) ஆகியவற்றின் கீழ் கடுமையான காயம், மிரட்டல், சட்டவிரோதக் கூடுதல், மிரட்டல் ஆகியவற்றுடன் அதிகபட்சமாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய வகையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

ஸ்நேகாவின் தந்தை தத்தாத்ரே, "எட்டாண்டுகளாக செய்தியாளராகப் பணிபுரிகிறாள் ஸ்நேகா. இதற்கு முன்பு சிலசமயம் ஸ்நேகாவுக்கு மிரட்டல் வந்திருக்கிறது. தாக்குதல் நடப்பது இதுதான் முதல்முறை. பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்''’என்கிறார்.